அடுத்த நொடியில் காத்திருந்த எமன்...துள்ளி குதித்து விளையாடிய சிறுவன்...பிணமான பெரும் சோகம்
அடுத்த நொடியில் காத்திருந்த எமன்... துள்ளி குதித்து விளையாடிய சிறுவன்... பிணமான பெரும் சோகம்
பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் குளித்த அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ,சிங்கையன் புதூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளியான விக்னேஸ்வரன், தனது உறவினர் பிரபு என்பவரது ஏழு வயது மகனான விஷ்ணுவுடன்
வீட்டருகே உள்ள கல்குவாரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர். திடீரென இரண்டு பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் தத்தளித்து உயிருக்காக போராடி சத்தம் போட்டுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பேச்சு மூச்சு இன்றி இருந்த இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.