முதலில் `ஆதங்கம்'.. அப்புறம் `யூடர்ன்'... பணியின்போது மயங்கி விழுந்த காவலர் - மனைவி வெளியிட்ட வீடியோ

Update: 2023-11-21 02:03 GMT

உதகையில் பணியின்போது மயங்கி விழுந்த போக்குவரத்து காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து காவலராக பணியாற்றும் மணிகண்டன் கடந்த சனிக்கிழமை பணியின்போது மயக்கம் அடைந்ததால் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வார விடுப்பு கேட்டதாகவும், போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் வார விடுப்பு அளிக்காததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மணிகண்டனின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

Tags:    

மேலும் செய்திகள்