தலைக்கேறிய போதையில் அட்டூழியம்..எச்சரித்த ஏட்டைய்யாவுக்கு விழுந்த குத்து

Update: 2024-08-07 08:13 GMT

தலைக்கேறிய போதையில் அட்டூழியம்..எச்சரித்த ஏட்டைய்யாவுக்கு விழுந்த குத்து - நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி காட்சிகள்

வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலை பகுதியில் 3 பேர் மது போதையில் போக்குவரத்துக்கு இடியூறாக வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, தலைமை காவலர் முத்துடையார், போக்குவரத்துக்கு இடையூறாக தகராறு செய்ய கூடாது என எச்சரித்தார். அப்போது, மது போதையில் இருந்த சுதன்பிரபு, அழகிரி, ஜெயராஜ் ஆகிய மூன்று பேரும், தலைமைக் காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்