தட்டிக்கழித்த போலீஸ் கணவர் - மனைவி எடுத்த விபரீத முடிவு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில், முதல்நிலை காவலர் முத்து தனது மனைவி புனிதா மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் புனிதா கோயிலுக்கு அழைத்ததாகவும், அதற்கு நாளை செல்லலாம் என்று கூறி முத்து டிவி பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த புனிதா படுக்கை அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டு இருந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புனிதா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.