வாகன ஓட்டிகளிடம் Promise வாங்கிய காவல் அதிகாரி... மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்
மதுரை காளவாசல் பகுதியில் புதிதாக அமைக்க்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னலை, மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். மேலும் அவர்களிடம் தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுவது தொடர்பாக சத்தியம் பெற்றுக் கொண்டார். அதேசமயம் தலைக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு, காவல் ஆணையர் லோகநாதன் பரிசுப்பொருட்களை வழங்கினார்...