லட்சாதிபதி சகோதரி : சுய உதவி பெண்களுக்கு... PM மோடியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்

Update: 2024-08-25 16:18 GMT

லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினருக்கு, ஐந்தாயிரம் கோடி கடன் மற்றும் 2500 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர், நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து, 4 லட்சத்து 33 ஆயிரம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் 2 ஆயிரத்து 500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். மேலும், 2 லட்சத்து 35 ஆயிரம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25 லட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனையும் வழங்கி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்