ஜூன் 4 பிறகு வீசப்போகும் சூறாவளி - ரிசல்ட் வரும் முன்னே கணிப்பு

Update: 2024-05-30 07:07 GMT

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 6 மாதங்களில் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கும் என குறிப்பிட்டார். அதேசமயம், இந்த 6 மாதங்களில் அரசியலில் சூறாவளி வீசப்போவதாகவும், குறிப்பாக குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் எனவும் பிரதமர் மோடி விமர்சித்தார். குடும்ப கட்சிகளில் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தொடர் தோல்விகளை சந்திக்கும் தலைவர்களை தொண்டர்களே கேள்வி கேட்கும் நிலை வரப்போவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்