#Breaking : குழந்தையால் இணைந்த குடும்பம்..! - பாமக MLA-க்கு எதிரான வழக்கு ரத்து
பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. எம்.எல்.ஏ சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன் சங்கர் மற்றும் மகள் மீது மருமகள் மனோலியா வரதட்சணை கொடுமை புகார். புகார் தொடர்பாக சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் கோரி சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் மனுத்தாக்கல். குழந்தையின் நலனுக்காக கடந்த கால நிகழ்வுகளை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர விரும்புவதாக சங்கர், மனோலியா நீதிபதியிடம் உறுதி. குழந்தையின் பிறந்த நாளில் தாய், தந்தையரை சேர்த்து வைத்தது கோடி ரூபாய் கட்டணத்தை விட மேலானது என இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி பாராட்டு.