பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் - பேராசிரியருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ்

Update: 2024-10-27 02:29 GMT

பெரியாரைப் பற்றி புத்தகம் எழுதியதற்காக பத்து மாதங்கள் கழித்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர் கட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் சுப்பிரமணியன், மெக்காலே பற்றியும், பெரியாரைப் பற்றியும் ஓராண்டுக்கு முன்பு இரண்டு நூல்களை வெளியிட்டு இருந்தார். பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறாமல் நூல்களை வெளியிட்டதாக கூறி, விளக்கம் கேட்கப்பட்டு, அதற்கு பேராசிரியர் சுப்பிரமணியன் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது பேராசிரியருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் செயல்களை தடுப்பதாக இருக்கிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்