மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்கப்படுமா?...சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பீகாரில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி கல்லூரிகளில், சில தனியார் நிறுவனங்களில் விடுப்பு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாதவிடாய்க்கு மருத்துவச் சான்றிதழ் பெறுவது இயலாதது என்பதால், மருத்துவச் சான்று இல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை வகுக்கக் கோரிய வழக்கில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையை அணுகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தது.