"அவர்ட்ட கொடுங்க நா வாங்கிக்கிறேன்.." - தீயாய் பரவும் லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி வீடியோ
"அவர்ட்ட கொடுங்க நா வாங்கிக்கிறேன்.." - தீயாய் பரவும் லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி வீடியோ
பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் அகரம் கிராமத்தில் வண்டல் மணல் எடுப்பதற்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வண்டல் மணலை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்காக விவசாயிகள் சார்பில் நேரிலும், இணையம் வழியாகவும் விண்ணப்பம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இணையம் மூலம் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு விட்டு, விவசாயிகளிடம் சுமார் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினர் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.