பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் கிடந்த வண்டல் மண்ணில் அரசுப் பேருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. அசுர் கிராமத்தில் இருந்து அரியலூர் பெரம்பலூர் சாலையை இணைக்கும் சாலையில், வண்டல் மண் சிதறியுள்ளது. மழை காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் வழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து சறுக்குக் கொண்டு சாலை ஓரமாக சென்ற போது, ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, ஜேசிபி மூலம் இரும்பு வடம் கட்டி பேருந்து மீட்கப்பட்டது. அதன் பின்னர், சாலையில் இருந்த வண்டல் மண் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது...