அதிக வட்டிக்கு ஆசைபட்ட மக்கள்.. "ஆனா அசலை காணவே வழி இல்ல" - பணத்தை பறிகொடுத்து கதறும் மக்கள்

Update: 2023-08-17 02:59 GMT

சென்னை விருகம்பாக்கம் பகுதியில், சிவசக்திவேல் என்பவர், பிராவிடண்ஸ் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் பொதுமக்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக, ஒரு கவர்ச்சி விளம்பரத்தை அறிவித்துள்ளார். இதனை நம்பிய ஏராளமானோர், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதல் 3 மாதம் வட்டிப் பணம் சரியாக வரவே, அதனை நம்பி மேலும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு வட்டிப் பணம் வராததால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டபோது, அதன் நிறுவனர் தலைமறைவானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளர் சக்திவேலுக்கு, லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்