சென்னையில் அசோக் நகர், கே.கே நகர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நள்ளிரவில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இது ஒரு புறம் இருக்க, திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டு, அவதிக்கு உள்ளாகினர்.