இந்த செடிகளால் உயிருக்கே ஆபத்து.. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் சண்டையை உருவாக்கி அழிவை தரும்
வனவிலங்குகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் "பார்த்தீனியம்" செடிகளால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நிரம்பியுள்ளது விலங்குகளின் உடல்நலனைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மிகக் கொடிய கலைச்செடியான பார்த்தீனியம் செடிகள் தற்பொழுது முதுமலையை ஆக்கிரமித்துள்ளன... இதன் மூலம் வனவிலங்குகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக இந்த செடிகள் பரவும் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான மற்ற தாவரங்கள் சரிவர வளராததால் வனவிலங்குகள் தற்போது குடியிருப்புகளுக்குப் படையெடுக்கின்றன.
போர்க்கால அடிப்படையில் வனத்துறையினர் வனப் பகுதியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பார்த்தீனியம் செடிகளை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.