எதிர்க்கட்சி MP-க்கள் செய்த சம்பவம்..இறுக்கப்பட்ட மக்களவை விதிகள்

Update: 2024-07-04 09:01 GMT

பதவி பிரமாணத்தின் போது புதிய எம்.பிக்கள் கோஷம் எழுப்ப தடை விதிக்கும் வகையில் மக்களவை விதிகளில் திருத்தம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். மக்களவை விதி எண் 389ல் சபாநாயகர் ஓம் பிர்லா திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி, மக்களவை எம்பிக்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்கும் போது, கூடுதலாக எந்த விதமான கருத்துக்களையோ, முழக்கங்களையோ எழுப்ப தடை விதிக்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அவை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான மக்களவை விதிமுறைகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்களின் அரசியல் செய்தியை வெளிப்படுத்த புனிதமான சத்தியப் பிரமாண நிகழ்வை எம்.பி.க்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 18வது மக்களவைக்கு தேர்வான புதிய எம்.பிக்கள், பதவி பிரமாணத்தின் போது, கோஷங்கள் எழுப்பியது சர்ச்சையான நிலையில், தற்போது மக்களவை விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்