NDA அரசின் முதல் பட்ஜெட்.. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது `தேதி'
பிரதமர் மோடி தலைமையிலான 3 ஆவது பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறத
18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்த பிறகு, நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் 24 ஆம் தேதி தொடங்கியது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, குடியரசு தலைவர் உரையை அடுத்து எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரையில் நடக்கிறது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 3 ஆவது பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இப்போது இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த கூட்டத்தொடர் நிறைவேற்றும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனால் மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.