நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். வேலூரில் உள்ள ஓட்டலில், கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நியமன ஆணைகளை வழங்கிய ஏ.சி சண்முகம், தொகுதிகளில் புதிய பொறுப்பாளர்களை விரைவில் நியமனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகளுடன் ஏ.சி.சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார்.