நாடாளுமன்றத்தை ஆட்டிவைக்க போகும் மந்திர கோல்..! நாட்டில் முதல் முறையாக... ஆரம்பமான கச்சேரி... யாரும் நினைக்காத ட்விஸ்ட் கொடுத்த காங்., நா.நி. Vs I.N.D.I.A. - பாஜகவின் பிளான் என்ன..?

Update: 2024-06-18 13:52 GMT

நாட்டில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் 2014, 2019 போல் நேரடியாக சபாநாயகர் பதவியை பெற முடியாத சூழல் நிலவுகிறது. ஒரு கட்சியை சேர்ந்த எம்.பி., மற்றொரு கட்சிக்கு தாவினால் முக்கிய முடிவை எடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது. அந்த பதவியை பெற பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் விரும்பியதாகவும், பதவியை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளை பாஜக சமரசம் செய்வதாகவும், விரிவான ஆலோசனைக்கு பிறகு பாஜக விருப்பத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

மறுபுறம் இணக்கமான நகர்வாக துணை சபாநாயகர் பதவியை பெற காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. 2014-ல் மத்தியில் ஆட்சியமைத்த போது அதிமுகவுக்கு இந்த பதவியை பாஜக வழங்கியது. இப்போதும் தங்கள் கூட்டணி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கவே பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. இப்போது மக்களவையில் இந்தியா கூட்டணியும் பலமாக இருக்க இணக்கம் ஏற்படவில்லை என்றால் யார் சபாநாயகர் என்பதற்கு ஜூன் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அப்படி தேர்தல் நடைபெற்றால் சுதந்திர இந்தியாவில் சபாநாயகர் பதவிக்காக நடக்கும் முதல் தேர்தல் அதுவாகவே இருக்கும். இதுவரையில் இணக்கமான முடிவிலேயே சபாநாயகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்