"பரப்பன அக்ரஹாரம் சிறை பணம் இருப்பவர்களுக்கு சொர்க்கம்.. பணம் இல்லாதவர்களுக்கு நரகம்"

Update: 2024-08-27 05:22 GMT

பரப்பன அக்ரஹாரம் சிறை என்பது பணம் இருப்பவர்களுக்கு சொர்க்கம் எனவும், பணம் இல்லாதவர்களுக்கு நரகம் எனவும் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததை வெளிக்கொண்டு வந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தற்போது நடிகர் தர்ஷன் விவகாரத்திலும் சிறையில் முறைகேடு நடப்பதை சுட்டிக்காட்டினார். சிறையில் உள்ள தர்ஷனுக்கு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில், இதுவரை 9 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் நடைபெறும் முறைகேடுகளை களைய நீதிபதி, போலீசார் மற்றும் சமூக ஆர்வலர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்