பழனி கோயில் வழக்கில் நீதிபதிகள் கேட்ட சரமாரி கேள்வி... கையோடு போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-08-28 08:59 GMT

பழனி முருகன் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 364 கட்டுமானங்களின் அனுமதி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, பழனி நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்பு பேசிய நீதிபதிகள்,

திருவிழா காலங்களில் பழனிக்கு 7 லட்சம் பக்தர்கள் வருவதாகவும், கிரிவல பாதையில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதா என்பதை கண்காணிப்பு குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்