திடீரென பிடிக்காமல் போன பிரேக்..3 கிமீ தாறுமாறாக சென்ற அரசு பேருந்து..

Update: 2024-06-18 09:25 GMT

திடீரென பிடிக்காமல் போன பிரேக்..3 கிமீ தாறுமாறாக சென்ற அரசு பேருந்து..சமயோஜிதமாக யோசித்து செயல்பட்ட டிரைவர் - கடைசியில் நடந்த திக்.. திக்..

பழனி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது...பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது விகே மில் பகுதியில் பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் 3 கிலோமீட்டர் தூரம் வரை சென்றது... ஓட்டுநர் சுக்கம நாயக்கன்பட்டி அருகே சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் விபத்தின்றி நிறுத்தினார்... தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் பின்னால் வந்த மற்ற பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து சரி செய்யப்பட்டு டிப்போவுக்கு ஓட்டிச் செல்லப்பட்டது... இதுகுறித்து டிப்போ மேலாளர் விசாரணை செய்து வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்