பாகிஸ்தான் பார்லிமென்டில் அட்டாக்..கடித்து குதறப்பட்ட நாட்டு ரகசியங்கள் - அதிரவிடும் பின்னணி
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை எலிகள் பாடாய் படுத்துவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்புபக்கத்து நாடான பாகிஸ்தானில்... நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சினையே ஓடிக்கொண்டிருக்கிறது. பிரச்சினை அரசியல்வாதிகளாலா என்று கேட்டால்.. அப்படியெல்லாம் இல்லை... பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அட்டாக் செய்திருக்கும் எலிகள்... எலிகள்தான் எளிதாக கொன்றுவிடலாமே என நினைத்தால்... அப்படியெல்லாம் இல்லங்க இங்க இருக்க எலிகளை பார்த்தால் பூனையே பயப்படும்... எலிகள் அனைத்தும் அவ்வளது பெரியது என்று பதறுகிறார் பாகிஸ்தான் கீழவை செய்தித் தொடர்பாளர் ஜாபர் சுல்தான்... இந்த தொல்லை இப்போது இல்லங்க... ரொம்ப நாளாகவே இருக்கிறது என சொல்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள்.. 2008-ல் ஆய்வு செய்தபோது... படத்தில் வடிவேலு பாஸ்போர்ட்டை பிரித்த மாதிரி... எலிகள் பாகிஸ்தான் ஆவணங்களையும் பார்ட் பார்ட்டாக பிரித்திருந்தது தெரியவந்துள்ளது.