கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு...சிறிது நேரத்தில் நிறுத்தம் - அதிர்ச்சியில் விவசாயிகள்

Update: 2023-08-16 06:11 GMT

கீழ் பவானி வாய்க்காலில் கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ் பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்துவதற்காக, தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி நன்செய் பாசனத்திற்கு நீர் திறப்பது வழக்கம். வாய்க்காலில் தடுப்புச் சுவர் கட்டுமான பணி நிறைவடையாத நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால், முதற்கட்டமாக 100 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால், மதகுப் பகுதியில் தூவப்பட்ட மலர்கள் அங்கேயே மிதந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாய்க்கால் கட்டுமான பணி 3 அல்லது 4 நாட்களில் நிறைவடைந்த பின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்