2வது உள்நாட்டு முனையம் திறப்பு - சென்னைக்கு கூடுதல் விமானங்கள்?

Update: 2023-11-14 13:10 GMT

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1வது உள்நாட்டு முனையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்படும். அதோடு ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா விமானங்களும் இயக்கப்படும். புதிதாகத் தொடங்கப்படும் 2வது உள்நாட்டு முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் உள்நாட்டு சேவைகள் இயக்கப்படும். வருங்காலத்தில் படிப்படியாக 2வது உள்நாட்டு விமான முனையத்திற்கு பிற விமான சேவைகள் மாற்றப்பட இருக்கிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு முனையங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல் கூடுதல் இடவசதி கிடைக்கும். பயணிகளின் வசதிக்காக மேலும் கூடுதல் விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்