நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த கோரிக்கையை மக்களிடம் பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் வகையிலும், திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த கையெழுத்து இயக்கத்தில், ஏராளமானோர் கையெழுத்திட்டு வருகின்றனர். இதுவரை ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.