இதன் மூலம் இதர வரிகளையும் சேர்த்து சமையல் எண்ணெய் மீதான வரி 27.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக சமையல் என்ணெய் உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடமிருந்து சோயாபீன் பயிர்களை அதிகளவில் கொள்முதல் செய்து, சோயாபீன் பயிர்கள் விலை அதிகரித்து, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என தெரிவித்துள்ளார். பாஸ்மதி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியும் 20சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரி 32.௫ சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் விளைவாக பாஸ்மதி, வெங்காயம், கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்றார்.