இறுதிச் சடங்கிற்கு நிதியுதவி அளிக்காத அலுவலர்.. மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு

Update: 2024-03-12 02:27 GMT

திருநின்றவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஞானவேல் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, அவருடைய மனைவி ராஜம்மாள், நலத்துறை வாரியத்தால் வழங்கப்படும் 17 ஆயிரம் ரூபாய் பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசனை அணுகினார்.

அவர் இறப்புச் சான்றிதழ் கொண்டு வாங்கி வரும்படி கூறியதால், சிம்மசந்திரன் என்பவர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் இயக்குனர் லட்சுமியை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து, உடனடியாக இரண்டு ஆயிரம் ரூபாயை ராஜம்மாளுக்கு கொடுக்குமாறு சீனிவாசனுக்கு லட்சுமி உத்தரவிட்டார். ராஜம்மாளிடம் ஜிபே வசதி இல்லாத நிலையில், வேறு ஒருவர் எண்ணுக்கு அனுப்ப சீனிவாசன் மறுத்து விட்டார். பின்னர், நண்பர்கள் உதவியுடன் ஞானவேலின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக நாளிதழில் செய்தி வெளியானது . இதனடிப்படையில், சீனிவாசனை வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக விளக்கம் அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்