"ஒடிசாவை ஒரு தமிழர் ஆள்வதா..? பொறுக்க முடியாது..!" - ஆர்ப்பரித்து கொந்தளித்த அமித்ஷா
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெயரில் தமிழர் ஒருவர் திணிக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஜாஜ்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஒடிசாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொடுத்த 7 லட்சம் கோடி ரூபாய் கிராம மக்களை சென்று சேர்ந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். ஒடிசாவில், இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டுமா அல்லது தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் ஆட்சி வேண்டுமா? என தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியனை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார்.
சுயமரியாதையை காப்பாற்ற அசோக மன்னருடன் போரிட்டு மரணம் அடைந்த ஒடிசா மக்கள், ஒருபோதும் தலை குனியவில்லை என்றும் அவர் கூறினார். நவீன் பட்நாயக் பெயரால், தமிழர் ஒருவர் திணிக்கப்படுவதை தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.