நார்வே சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள பள்ளிகளின் வகுப்புகளை பார்வையிட்டார். பள்ளியில் உள்ள ஆய்வகங்களை பர்வையிட்ட அவர், மாணவர்களுடன் அமர்ந்து கற்பித்தல் முறையையும் பார்வையிட்டார். அத்துடன் மாணவர்களுடன் கலந்துரையாடி தமிழ்நாடு குறித்த அறிமுகத்தை அவர்களுக்கு வழங்கினார்.