ஏமாற்றிய மழை; கண் முன் கருகிய பயிர்கள்- "எங்களுக்கு வேற வழி தெரியல" கலங்க வைத்த விவசாயிகளின் செயல்

Update: 2023-10-26 17:58 GMT

புவனகிரியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர் கருகிய நிலையில், மழை வேண்டி விவசாயிகள் வயலில் அங்க பிரதட்சணம் செய்தனர். கடலூர் மாவட்டம் சித்தேரி கிராமத்தில், 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். தற்போது சம்பா பயிர்களுக்கு தண்ணீர் இல்லாததால், முளைத்த நெல் நாற்றுகள் கருகி விட்டன. இதனால் வேதனையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், அங்க பிரதட்சணம் செய்து தங்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என இயற்கைக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்