சர்வமும் சர்ச்சை மயம் நித்யானந்தாவைச் சுற்றி... சர்ச்சைக்குப் பெயர் போனவர்கள் பலர் இருக்கலாம்... ஆனால் சர்ச்சையே பெயர் போனது நித்யானந்தாவால் தான்...
கடவுளின் அவதாரம் நான் என்பதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்...அந்தக் கடவுளே நான் தான் என்பது தான் நித்தி ஸ்டைல்...
பாலியல் வழக்கு...கடத்தல் வழக்கு...இவையெல்லாம் ஒருபுறம் உறங்கிக் கொண்டிருக்க..."சொக்கத் தங்கம் சொக்கத் தங்கம் ஜுவல்லரி..." என்பதைப் போல தங்க ஆபரணங்கள் ஜொலிஜொலிக்க...சர்வ காலமும் சிஷ்யைகள் புடைசூழ..."பக்திப் பரவசத்துடன் ஆன்மீக சொற்பொழிவாற்றும் இவரைக் கண்டு சிங்கிள்ஸ்கள் பலர் வயிறெரிவதுண்டு...
வழக்கு விவகாரங்கள் கழுத்தை நெறிக்க...வெளிநாட்டிற்குத் தப்பியோடிய நித்தி...நானே ராஜா...நானே மந்திரி...என கைலாசா எனும் தனி நாடு...தனி ஆட்சி...தனிக்கொடி...தனி பாஸ்போர்ட்...தனி கரன்சி...சகல வசதிகளுடன் "வாகாய் வாகாய் வாழ்கிறேன்..." என ஜம்மென வாழ்ந்து வருகிறார்...
சிறிது காலம் தான் அவரைப் பற்றி எந்த சர்ச்சையும் வராமல் இருந்தது... அதற்குள் அவர் இறந்து விட்டதாக விஷமிகள் சிலர் செய்திகளைப் பரப்பவே..."எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க...எனக்கு என்டே கிடையாதுடா" என்று திரையில் தோன்றி ரசிகர்களை நிம்மதியடையச் செய்தார் நித்தி...
இடையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதாய் அவர் அறிவித்ததைக் கண்டு நிச்சயம் பால ராமரே அதிர்ந்திருப்பார்...
மதுரைக்கு மாறு வேஷத்துல வர்றேன்.. திருவண்ணாமலைக்கு திடீர்னு வர்றேன் என அவ்வப்போது வீடியோவில் ரைமிங் ஆக பேசி வந்தார் நித்தி...
நித்யானந்தாவின் கைலாசா எங்கு இருக்கிறது என அனைவரும் கொண்டிருக்க... இப்போது வரையிலும் அந்த மர்மம் மட்டும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது...
கைலாசாவில் குடியேற துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்...
இதோ...ரசிகர்களே...நித்தி உங்களை ஏமாற்றவில்லை... வரும் 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்குமிடம் அறிவிக்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா...
அத்துடன் கைலாசாவாசியாக பதிவு செய்யவும் இணைய முகவரி வழங்கப்பட்டுள்ளது...
கைலாசா இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுடன் சேர்ந்து பல மாநில போலிசாரும் வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றனர்...
சீக்கிரம் சொல்லுங்க நித்தி... கைலாசாவுக்கு டிக்கெட் போட்டுடறேன் என இணையவாசிகளின் கமெண்டுகளால் கைலாசாவின் இணையதள பக்கம் கலகலப்பாக நிரம்பி இருக்கிறது...