உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு ரேஷன் முதல் உதவித்தொகை வரை அனைத்தையும் ரத்து செய்த அதிகாரிகள்

Update: 2024-03-23 08:35 GMT

நீலகிரி அருகே பழங்குடியின கிராமத்தை சேர்ந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி, அவருக்கான உதவித்தொகை, ரேஷன் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பாலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தங்கு. இவர் இறந்துவிட்டதாக கூறி ரேஷன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்பட்டு, ரேஷன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவருக்கான முதியோர் உதவித்தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, உயிரோடிருக்கும் தனக்கு மீண்டும் ரேஷன் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டுமென கோரி, அதிகாரிகளிடன் மனு அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அம்மூதாட்டி தவித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்