கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, கார் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு என்.ஐ.ஏ.-வுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும், 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், 6 லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.