"ஹெட்மாஸ்டர எதுக்கு தூக்குனீங்க..அவர ஸ்கூல விட்டு அனுப்ப மாட்டோம்"-மக்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் பரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், பாபு செல்வின் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமையாசிரியர் பாபு செல்வின் பள்ளியின் கட்டமைப்பை புதுப்பித்ததாகவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதில் அவர் அக்கறை காட்டியதாகவும், குழந்தைகள் மிகுந்த பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தனர். எனவே தலைமையாசிரியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யாவிட்டால், போராட்டம் தொடரும் என்றும் பெற்றோர் அறிவித்துள்ளனர்.