நெல்லையில் பிரமாண்ட மாற்றம்... ``ரூ,1,260 கோடியில்..'' - இளைஞர்களே குட் நியூஸ்

Update: 2024-09-27 12:49 GMT

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சேலார் மாடியூல் மற்றும் சேலார் செல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை விக்ரம் சேலார் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆயிரத்து 260 கோடி ரூபாய் முதலீட்டில், 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி

விக்ரம் சேலார் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இந்த வளாகத்தில் டாடா பவர் சோலார் நிறுவனம் 313 ஏக்கரில் சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை ஏற்கனவே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்