தலைமை ஆசிரியரை கொல்ல ஆயுதங்களுடன் பிளான் போட்டு ஸ்கூலுக்குள் வந்த மாணவர்கள் - நெல்லையில் பயங்கரம்

Update: 2024-08-10 12:22 GMT

தலைமை ஆசிரியரை கொல்ல பள்ளிக்கு ஆயுதத்துடன் வந்த மூன்று அரசு பள்ளி மாணவர்களை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்து நெல்லை மாவட்ட கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்

பதினோராம் வகுப்பு படித்த மூன்று மாணவர்கள் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்

மூன்று மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் தலைமை ஆசிரியரை கொல்ல கத்தி கத்தரிக்கோல் உள்ளிட்ட ஆயுதங்களை புத்தக பையில் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்களையும் கைது செய்த போலீசார் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் மூன்று மாணவர்களைவயும் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்