நெல்லை பிசான பருவ சாகுபடிக்காக காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, காரையார் அணையின் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டார். இன்று முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும் கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய் என சுமார் 11 கால்வாய்கள் மூலம் சுமார் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.