பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்...தமிழகத்துக்கு திருஷ்டி போல் விழுந்த பேரிடி

Update: 2024-08-25 10:32 GMT

பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்... தமிழகத்துக்கு திருஷ்டி போல் விழுந்த பேரிடி

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களிடையேயான மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களிடையேயான வன்முறை எண்ணத்தை தடுக்க என்ன தான் வழி ? கல்வியாளர்கள் சொல்வது என்ன ? என்பதை பார்க்கலாம் விரிவாக...

கல்வியில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், அதற்கு திருஷ்டி பட்டது போல அமைந்து வருகிறது மாணவர்களிடையே நடந்து வரக்கூடிய மோதல்கள்.

அதிலும் அண்மைக்காலமாக பள்ளி மாணவர்களிடையேயான மோதல்கள் தொடர்கதையாகி வருகிறது பலரையும் கவலைக்குள்ளாகி வருகிறது.

வகுப்பறையிலேயே ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது, வீடு புகுந்து தாக்குதல் நடத்துவது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது என கவலையுறச் செய்யும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கும் கல்வியாளர்கள், கொரோனா தொற்றுக்கு பின்னர் தான், மாணவர்களிடையே வன்முறை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்..

ஒரு காலத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு பக்கபலமாக இருந்த நிலையில், தற்போது மாணவர்களே ஆசிரியர்களுக்கு கட்டளையிடும் அளவிற்கு மாறியுள்ளதால், பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் திணறுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதற்கெல்லாம் மொபைல் ஃபோன் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக குற்றஞ்சாட்டும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார், மாணவர்களின் மனநிலையையும் விவரிக்கிறார்...

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும், படிப்பு, மதிப்பெண் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், மாணவர்களின் நன்னடத்தையில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது..

இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரியில் நடைபெறக்கூடிய மோதல் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து உடனடியாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்