நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தேங்கல்பாளையத்தில் இயங்கி வரும் காந்தி கல்வி நிலைய உயர்நிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உணவருந்தி, மாணவ, மாணவியருக்கு பென்சில், பேனாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.