வறுமையைப் பயன்படுத்தி கிட்னி திருடும் கும்பல் - நாமக்கல்லை அதிரவைத்த விவகாரம்

Update: 2024-05-04 14:15 GMT

சமீப காலமாக கடன் வறுமை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் சிறுநீரகம் விற்பதாக புகார் எழுந்தது. ஆலம்பாளையம் பேரூராட்சி 6வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் இது குறித்து தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பிய நிலையில், இதனை அடுத்து பாலசுப்பிரமணியம் மற்றும் சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யும் சிறுநீரக இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்பனை நடைபெறுவதாக தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டு, ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் சிறுநீரகம் விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்