"பால் கொண்டுவரக் கூடாதா.." ஆத்திரமடைந்த பக்தர் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் ஆடியோ

Update: 2024-08-18 16:55 GMT

ஆவணி ஞாயிறையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பால் வியாபாரமா? என, பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பிய வீடியோ, வலை தளங்களில் பரவி வருகிறது. நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயிலில், ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஏராளமான பக்தர்கள் சென்று, மஞ்சள் பொடி நாகராஜா சிலைக்கு, பால் ஊற்றி வணங்கினர். அந்த கோவிலில், வெளியில் இருந்து பால் கொண்டு வர வேண்டாம் என்றும், கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள பாலை வாங்குமாறு கோயில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினார். இதை கேட்ட பக்தர் ஒருவர் கோயில் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பாலுக்கு விளம்பரம் செய்கிறீர்களா, தனது வீட்டில் வளர்த்து வரும் பசுவின் பாலை கொண்டுவரக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். இந்த ஆடியோ வலை தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்