தனக்கு தானே... கரண்ட் பாய்ச்சிய காவலாளி... அலறிய அப்பார்ட்மெண்ட் - பகீர் தகவல்கள்

Update: 2024-06-26 13:46 GMT

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் குடியிருப்பில் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் தாப்பா என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவர் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் சென்று பார்த்த போது, அவர் தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து மக்கள் அதிர்ந்து போயினர். விசாரணையில், நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த கணேஷ் தப்பா, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மன உளைச்சலில் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்