தாயின் 3ஆவது கணவரை கொன்ற மகன் - நடுரோட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் மாதேஷ். இவரின் தாய்க்கு 3 கணவர்கள் இருந்த நிலையில், மூன்றாவது கணவரான சரித்திர பதிவேடு குற்றவாளி பரணிக்குமாருடன் மாதேஷ்க்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியேவந்த பரணிக்குமாருடன் தன் நண்பருடன் சேர்ந்து சென்று மாதேஷ் தகராறு செய்த நிலையில், இருவருக்குமிடையேயான மோதல் முற்றியிருக்கிறது. இதில், நடுரோட்டில் வைத்து பரணிக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மாதேஷ் மற்றும் அவரது நண்பர் முகமது தெளபீக்கை தேடி வருகின்றனர்.