இரவு பகலாக இயங்கிய கிரஷர்கள்.. அடுத்தடுத்து வந்த புகார்கள்.. அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..
சென்னை பல்லாவரம் அருகே பம்மல் காமராஜபுரத்திலும், திருநீர்மலை புறவழிச்சாலையை ஒட்டி இயங்கும் கிரஷர்களில் 4 மட்டுமே அரசின் முறையான அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ளவை அனுமதி பெறவில்லை. அதேபோல், பம்மலில் கலப்பட மணல் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் பம்மல், திருநீர்மலை, அனகாபுத்துார் பகுதிகளில் இயங்கும் கிரஷர்களை ஆய்வு செய்தனர்... முதற்கட்டமாக 4 கிரஷர்களுக்கு சீல் வைக்கப்பட்டு அவற்றைச் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டது... அதேபோல், கலப்பட மணல் கொட்டப்பட்டுள்ள இடங்களில், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்குப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.