கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை புதூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ். நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த ஸ்டான்லி பிரின்ஸ், தக்கலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ஸ்டான்லி பிரின்ஸின் நடவடிக்கை பிடிக்காமல் அப்பெண் பிரிந்து சென்ற நிலையில், மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து ஸ்டான்லி பிரின்ஸ் மிரட்டி வந்ததாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனிடையே, நாகர்கோயிலை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் கவரிங் கடையில் நகை ஆர்டர் செய்த நிலையில், நகை மாடலுக்காக தன்னுடைய திருமண போட்டோவை அவர் அனுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து பேராசிரியருக்கு வாட்ஸ் அப்பில் ஸ்டான்லி பிரின்ஸ் மிசேஜ் செய்ய ஆரம்பித்த நிலையில், அவரின் நோக்கத்தை தெரிந்து கொண்ட பேராசிரியர், ஸ்டான்லி பிரின்சஸை கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் பேராசிரியரின் புகைப்படைத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய நிலையில், அவரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.