உலக நாட்டுப்புற தின" கலை விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்றது. பாரம்பரிய கரகம் காவடி மயிலாட்டம் நாதஸ்வரம் நையாண்டிமேளம் கும்மிகோலாட்டம் தப்பாட்டம் கொம்புவாத்தியம் காளியாட்டம் கலைஞர்கள் கலை நிகழ்ச்சியுடன் நாட்டுப்புறக் கலைஞர்களின் ஊர்வலம் பேரணி நடைபெற்றது. பேரணி, தஞ்சாவூர் முனிசிபல் காலனி நகரிலிருந்து புறப்பட்டு, தென்னகப் பண்பாட்டு மையத்தில் பேரணி நிறைவடைந்தது. சுமார் 800-ற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர். சாலையில் பேரணியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.