"மணி மியூல்".. அப்கிரேடான திருட்டு கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.. உஷார் மக்களே

Update: 2024-02-25 00:26 GMT

சைபர் கிரைம் மோசடியில் புது யுக்தியாக "மணி மியூல்கள்" குறித்து வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்கள், தாங்கள் கொள்ளையடிக்கும் பணத்தை தங்களுக்கென ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் பரிவர்த்தனை செய்து வந்தனர். இந்த நடைமுறையில் அவர்கள் போலீசில் எளிதில் சிக்கி வந்த நிலையில், தற்போது தாங்கள் கொள்ளையடிக்கும் பணத்தை தங்களுக்கு கைமாற்றி விட ஒரு வங்கி கணக்கு உரிமையாளரை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவர்களை "மணி மியூல்"(money mule) என கும்பல் அழைத்து வருகிறது. இந்த சதித்திட்டத்தில், பல மணி மீயூல்கள்... தாங்கள் மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருப்பதை அறியாமலே குற்றத்தில் பங்கெடுத்து வருவதாகவும், அவர்களை ஆன்லைன் டிரேடிங்க்கில் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கு தேவை எனக்கூறி கும்பல் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில மணி மீயூல்கள் கமிஷன் தொகையாக கணிசமான தொகை பெற்று கும்பலுக்கு உதவி வருவதாக கூறப்படும் நிலையில், இதுவரை சுமார் 1.8 கோடி ரூபாய் வரை மணி மியூல்களிடம் இருந்து மோசடி கும்பலுக்கு கைமாறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கி விடுமுறையான சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் இந்த மோசடிகள் அரங்கேறுவதாகவும், திங்கள் கிழமை மோசடியை அறிந்து வங்கி மூலம் தங்களுக்கு புகார் வரும் போது கும்பல் தப்பிவிடுவதாகவும் கூறும் போலீசார், பல மணி மியூல்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்