ஹேமா கமிட்டி அறிக்கையை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் மனதில் எண்ணுவதாக தெரிவித்தார். மேலும், திரைத்துறையில் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நபர்களில், கேரள அமைச்சர் ஒருவர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக கேரளா அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.