சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 4வது இடம் பிடித்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி 4 தங்க பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றது.
இந்தச் சாதனை பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், கணிதத்தை இன்னும் பிரபலமாக்க உதவும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.